இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகரும், பெருந்தலைவருமான அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 110 ஆவது ஜனன தினம் இன்று (30) தலைநகர் கொழும்பிலும், மலையக பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான்  மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது, விசேட அதிதியாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்நிகழ்வின் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகள் நடந்தன.

இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின், தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *