திருகோணமலை நிலாவெளி, பெரியகுளம் மற்றும் இலுப்பைக்குளம் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பௌத்த விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் மக்கள் பேரவை ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், நேற்றைய தினம் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன், அடங்கலாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்னம்பலம் கஜேந்திரகுமார், செ.கஜேந்திரன் ஆகியோர் உள்ளடங்கலாக 14 பேருக்கு திருகோணமலை நிலாவெளி பொலிஸாரால் நீதி மன்றம் மூலம் தடை உத்தரவினை வழங்கியிருந்தார்கள் இருப்பினும் இவ் போராட்டமானது தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பெருமளவானோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இங்குள்ள மற்றைய தமிழ் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாத தடை உத்தரவு தமிழரசுக் கட்சியில் இரா. சாணக்கியன் அவர்களுக்கும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மட்டும் வழங்கப்பட்டதானது மற்றைய தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேல் மிகுந்த சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது அத்துடன் இவ்வாறான விடயங்களுக்கு இவர்கள் மறைமுக ஆதரவு வழங்குகின்றார்களோ என மிகுந்த சந்தேகம் எழுவதாக இரா . சாணக்கியன் அவர்கள் தெரிவித்தார்.