திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் தருவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து 16 கோடி ரூபாய் பணம் மோசடி செய்ததாக திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ரவீந்தர் சந்திரசேகர் ஒருவர். லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவரும், சினிமா தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் ₹16 கோடி மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ரவீந்தர் சந்திரசேகர் ஒருவர். லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். கடந்த வருடம் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமனம் செய்து கொண்டதை அடுத்து சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்தார்.
இந்த நிலையில், சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி பாலாஜி என்பவரிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு 16 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக மத்திய குற்றபிரிவு போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் ரவீந்தரை போலீசார் கைது செய்துள்ளனர். இது போன்று மேலும் இரண்டு பேரிடம் 8 கோடி மோசடி செய்திருப்பதாக போலீஸ் தகவல் தெரிவித்தனர்