நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் விஞ்ஞானத் துறை, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்துடன் இணைந்து பல்கலைக்கழக உள்வாரி இளங்கலைப்பட்டதாரி மாணவர்களுக்கான அரசியல் செயற்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் பற்றிய குறுங்காலக் கற்கைநெறி பாராளுமன்ற செயற்பாடுகளும் இன்று 09.09.2023 தொடக்கம் 10.09.2023 வரை கலை கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் விஞ்ஞானத் துறை தலைவர் கலாநிதி எம். அப்துல் ஜப்பாரின் நெறிப்படுத்திலில் நடைபெற்ற இந்த பாராளுமன்ற செயற்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் பற்றிய குறுங்காலக்
கற்கைநெறி அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற மக்கள் தொடர்பு அதிகாரி ஜெஸ்ரி முஹம்மட் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் விளக்கமாளித்தார். மேலும் பாராளுமன்ற நிர்வாக பணிப்பாளர் ஜி. தட்சனாராணி பாராளுமன்றம் மற்றும் ஜனநாயகம் தொடர்பிலும், பாராளுமன்ற நடைமுறை மற்றும் பாராளுமன்றத்தின் அலுவல் ஒழுங்கு தொடர்பிலும், பிரதிநிதித்துவத்தில் பாராளுமன்றத்தின் முக்கியத்துவம் தொடர்பில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் ஆகியோர் விளக்கமளித்தனர்.
“பாராளுமன்ற ஜனநாயகம் ஒரு கண்ணோட்டம்” விரிவுரையை இரண்டாம் நாளான நாளை (10) தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் விஞ்ஞானத் துறை தலைவர் கலாநிதி எம். அப்துல் ஜப்பார் நிகழ்த்த உள்ளதுடன், இலங்கை பாராளுமன்றத்திற்கான டிஜிட்டல் அணுகுமுறை தொடர்பில் பாராளுமன்ற மக்கள் தொடர்பு அதிகாரி ஜெஸ்ரி முஹம்மட் நிகழ்த்த உள்ளார், மேலும் இலங்கையில் சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் பாராளுமன்றத்தின் ஆவண அமைப்பு தொடர்பில் பாராளுமன்ற நூலகர் எஸ்.எல். சியாத் அஹமட் மற்றும் சமூக ஊடகம் மற்றும் பாராளுமன்ற ஜனநாயகம் தொடர்பில் பாராளுமன்ற ஊடக அதிகாரி நுஸ்கி முக்தார் ஆகியோர் நிகழ்த்த உள்ளனர்.
இன்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவிப்பதிவாளர் எம்.டீ. அஸ்ஹர் , துறை தலைவர்கள், விரிவுரையாளர்கள், பாராளுமன்ற உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து  கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *