இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவின் சுறாவளி சுழல் பந்தை எதிர்கொள்ள முடியாத பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது இந்திய கிரிக்கெட் அணியிடம் 228  ஓட்டங்களால் தோல்வியடைந்தது

குல்தீப் யாதவ் 25 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மழையின் காரணமாக நேற்று இடையில நின்ற  ஆசியா கிண்ணத்திற்கான சர்வதேச ஒரு நாள் கிரிக்கட் தொடரின் சுப்பர் லீக்  போட்டியானது இன்று மீண்டும் பெய்த மழையின காரணமாக தாமதமாக ஆரம்பமானது.

இந்திய பாகிஸ்தான் அணிகளுகிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் பகல் இரவு ஆட்டமாக இடம்பெற்றது.

நேற்று ஆட்டமிழக்கமால் இருந்த விராத் கோலி , கே.எல் ராகுல் இருவரும் இணைந்து பாகிஸ்தான் அணிக்கு தலைவலியை கொடுத்தார்கள்.

இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்காக 223 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

இதில் விராத் கோலி 122  ஓட்டங்களுடன் ஆட்டநாயகனாக தெரிவானார்.

 

ஸ்கோர் விபரம்

இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 356 ஓட்டங்கள்

ரோகித் சர்மா  56, கில் 58 விராத் கோலி ஆ.இ 122 , கே.எல் ராகுல் ஆ. இ 111

 

பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் சகல விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்கள்

பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 25 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *