இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபாவிற்கு உத்தியோக பயணம் மேற்கொண்டுள்ளார்.
டுபாய் விமான நிலையத்தில் மாற்று விமானத்திற்காக காத்திருந்த ஜனாதிபதி ரணில் அதிதிகள் தங்கும அறையில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தார்.
அந்நேரம் அதே இடத்திற்கு வந்திருந்த மேற்கு வங்காள முதல்வர் மம்தா பனர்ஜியை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மம்தா பானர்ஜியிடம், “எதிர்க்கட்சி கூட்டணிக்கு (இந்தியா) தலைமை வகிக்க போகிறீர்களா” என்று கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த மம்தா, “இது மக்களை சார்ந்தது தான். அவர்கள் ஆதரித்தால் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வரலாம்” எனப் பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
'क्या आप INDIA गठबंधन का नेतृत्व करेंगी.'
◆ पश्चिम बंगाल की सीएम ममता बनर्जी से श्रीलंका के राष्ट्रपति रानिल विक्रमसिंघे ने पूछा
◆ ममता ने कहा- "अगर लोगों का समर्थन मिला, तो हम कल जरूर सत्ता में आएंगे"#MamataBanerjee #SriLanka #INDIAAlliance pic.twitter.com/ORBDLivo7M
— News24 (@news24tvchannel) September 13, 2023
இந்த சந்திப்பு குறித்து மேற்கு வங்காள முதல்வர் தனது X தளத்தில்
இலங்கையின் திறன்மிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, டுபாய் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் என்னை சந்தித்தார். அப்போது என்னிடம் சில கலந்தாய்வு நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறும் அழைத்தார். அவர் அழைப்பு விடுத்தது என்னை நெகிழ வைத்தது. மேலும், கொல்கத்தாவில் நடைபெறும் ‘பெங்கால் உலகளாவிய வணிக உச்சி மாநாடு 2023’ இல் பங்குபெற அவரை அழைத்தேன். தொடர்ந்து அவர், என்னை இலங்கைக்கு பயணம் செய்யவும் கேட்டுக் கொண்டார். இந்த கலந்துரையாடல் இனிமையாகவும் அதேசமயம் ஆழமான சிந்தனையையும் ஏற்படுத்தியது” எனப் பதிவிட்டிருக்கிறார்.
His Excellency The President of Sri Lanka Ranil Wickremesinghe saw me at the Dubai International Airport Lounge and called me to join for some discussion. I have been humbled by his greetings and invited him to the Bengal Global Business Summit 2023 in Kolkata. HE the President… pic.twitter.com/14OgsYjZgF
— Mamata Banerjee (@MamataOfficial) September 13, 2023