சிறுவர் தடகள விளையாட்டு போட்டியில் கல்முனை வலய மட்டத்தில் தரம் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு பிரிவுகளிலும் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளது.
இதற்காக மாணவர்களை பயிற்றுவித்த பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் எம்.எப்.எம்.றிபாஸ் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.என்.எம்.ஆபாக் ஆகியோரையும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும் பாராட்டும் நிகழ்வு இன்று (27) பாடசாலையில் விசேட நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் மாலை அணிவித்து கௌரவித்தனர். கல்முனை வலயத்திற்குட்பட்ட ஐந்து கோட்டங்களில் இருந்து கலந்து கொண்ட பத்து பாடசாலைகளிலே இந்த பாடசாலை முதல் இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.