அமெரிக்காவில் 16 சிறுவர்களுக்குப் பாலியல் தொந்தரவு அளித்த ஆண் செவிலியருக்கு 690 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில், வேலைக்கோ, வெளியூருக்கோ செல்லும் பெற்றோர் வீட்டில் தனியாக உள்ள குழந்தைகளைப் பராமரிக்க செவிலியர்களை நியமிப்பது வழக்கம்.

அந்தவகையில் செவிலியர்களுக்கான இணையதளம் மூலம் மேத்யூ ஜாக்ஜெவ்ஸ்கி என்பவரை கடந்த 2019ஆம் ஆண்டு கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகள் தங்கள் 8 வயது மகனைப் பராமரிப்பதற்காக நியமித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சிறுவனிடம் ஜாக்ஜெவ்ஸ்கி தவறாக நடக்க முயன்றதாக அவர்கள் அளித்த புகாரின் பேரில் பொலிஸார் நடத்திய விசாரணையில், 5 ஆண்டுகளில் 16 சிறுவர்களுக்கு மேத்யூ ஜாக்ஜெவ்ஸ்கி பாலியல் தொந்தரவு அளித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த கலிஃபோர்னியா நீதிமன்றம், ஜாக்ஜெவ்ஸ்கி செய்தது மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் என்று கூறி அவர் மீது நிருபிக்கப்பட்ட 34 குற்றங்களுக்காக 690 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *