( வாஸ் கூஞ்ஞ)

எதிர்வரும் 22 ஆம் திகதி (22.10.2023) நடைபெற இருக்கும் சுவீஸ் பாராளுமன்ற தேர்தலில் இலங்கை மன்னார் மாவட்டம் பறப்பாங்கண்டல் கிராமத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்து வாழும் திரு சந்தியாப்பிள்ளை கபிரியேல் இத் தேர்தலில் போடடியிடுகின்றார்.

  1. இவர் மன்னார் பறப்பாங்கண்டல் கிராமத்தில் 14.02.1957 இல் பிறந்தவர்.

    இலங்கையின் வன்செயல் காரணமாக 1984 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்தார்.

    பின் அங்கிருந்து 1986 ஒஸ்ரியா என்ற இடத்துக்குச் சென்றார். அந்த நாட்டில் நான்கரை வருடங்கள் பல்கலைக்கழகப் படிப்பை மேற்கொண்டார்..

    இதைத் தொடர்ந்து சுவீஸ் நாட்டில் 1989 ஆம் அண்டு முதல் 25 வருடங்கள் மனநல வைத்தியசாலையில் ஆண் தாதியாக கடமைபுரிந்தார்.

    இதைத் தொடர்ந்து 8 வருடங்கள் எலும்பு முறிவு வைத்தியசாலையில் கடமை புரிந்து கொண்டிருந்த வேளையில் 1990 ஆம் அண்டு முதல் இவர் அந்நாட்டின் அரசாங்க அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்பாளராக இன்று வரை கடமை புரிந்து வருகின்றார்.

    மேலும் இவர் சுவீஸ் நாட்டில் மன்னார் மறைமாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 7 கத்தோலிக்க ஆலயங்களில் 2019 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை திருப்பண்டப் பொறுப்பாளராகவும் திகழ்ந்து வருகின்றார்.

    இவற்றுடன் 2016 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை அவர் வாழும் பகுதியின் நகர சபை உறுப்பினராகவும் தொடர்ந்து இருந்து வருகின்றார்.

    இந் நிலையிலேயே திரு சந்தியாப்பிள்ளை கபிரியேல் எதிர்வரும் 22 ந் திகதி சுவீஸ் நாட்டில் நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்றார்.

    இவர் இத்தேர்தலில் வெற்றிப் பெற்றால் சுவீஸ் பாராளுமன்றத்தில் இவர் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் என பதிவு செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

    (வாஸ் கூஞ்ஞ)
    .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *