இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் கடந்த 7 ஆம்திகதி ஆரம்பித்த நிலையில் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில் இந்த போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட காஸா வட்டாரத்திற்குள் நிவாரணப் பொருள்களை அனுமதிக்குமாறு மனிதாபிமான அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.
காஸாவில் தண்ணீர், உணவு, எரிபொருள் ஆகியவை தீர்ந்துவரும் நிலையில் மில்லியன் கணக்கானோரைக் காப்பாற்ற நேரம் குறைந்து வருவதாக மனிதாபிமான அமைப்புகள் எச்சரித்தன.
இஸ்ரேல் அனுமதிக்காக காஸாவுடனான எகிப்தின் எல்லையில் நிவாரணப் பொருள்களுடன் பல லாரிகள் காத்துக்கொண்டிருக்கின்றன.
அதேசமயம் நிவாரணப் பொருள்களைக் காஸாவிற்குள் கொண்டுசெல்ல அல்லது வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேற உதவியாகத் தற்காலிகமாகச் சண்டையை நிறுத்துவதற்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு மறுத்துவிட்டார்.
இந்நிலையில் காஸாவில் நிலைமை பேரிடரை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக உலகச் சுகாதார நிறுவனத் இயக்குநர் எச்சரித்தார்.
24 மணி நேரத்திற்குப் போதுமான தண்ணீர் , எரிபொருள், மின்சாரம் மட்டுமே காஸாவில் எஞ்சியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நிலையில் இஸ்ரேல் நிவாரணப் பொருள்கள் அனுமதிப்படவில்லை என்றால் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மரணச் சான்றிதழைத் தயார் செய்ய வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .