¶
( நூரளை பி.எஸ். மணியம்)
தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கந்தப்பளை நகரில் இருந்து கொங்கோடியா, கல்லாலவத்தை தோட்ட வழியாக இராகலையை நோக்கி செல்லும் பிரதான வீதியில் இந்த மண் சரிவு ஏற்பட்டு குறித்த வீதியூடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் காலநிலை மாற்றத்தினால் கந்தப்பளை பிரதேசத்தில் இன்று (18) புதன்கிழமை அதிகாலையில் முதல் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கொங்கோடியா தோட்ட பகுதியில் புதிதாக புனரமைக்கப்பட்டு செப்பணிடப்பட்ட வீதியில் பாரிய மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
எனவே குறித்த வீதியூடாக விவசாய காணிகள் மற்றும் குடியிறுப்புகளுக்கு பயணிக்கும் மக்கள் மாற்று வழியை பயன்படுத்துமாறு கந்தப்பளை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் இந்த வீதி ஊடான வாகன போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளதாக கந்தப்பளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.