ரஷியாவை ஒலிம்பிக்கில் அனுமதிப்பதற்கு மேலும் பல நாடுகள் எதிர்ப்பு குரல் கொடுத்துள்ளன.
போலந்து, லிதுவேனியா, லாத்வியா, எஸ்தோனியா ஆகிய நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷியா, பெலாரஸ் நாட்டு வீரர்களை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கும்போது மற்ற நாட்டு வீரர்கள் நெருக்கடிக்கு உள்ளாவார்கள்.
இரு நாட்டு வீரர்களையும் களத்தில் நேருக்கு நேர் சந்திக்க நேரிடும். அத்துடன் உக்ரைன் மீதான போரை திசைதிருப்பும் விதமாக இந்த விளையாட்டு பயன்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளன.
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த ஆண்டு நடக்கிறது.
இதற்காக பிரான்ஸ் அரசு பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.