றொரன்டோ நகர மேயர் ஜோன் டோரி தகாத உறவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
பெருந்தொற்று காலப் பகுதியில் தனது பணியாளர் ஒருவருடன் தகாத உறவு பேணியதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நகரின் மேயர் என்ற ரீதியிலும் குடும்பஸ்தர் என்ற ரீதியிலும் தாம் நடந்து கொள்ளத் தவறியதாக டோரி ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த தொடர்பு தம்மால் இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.