மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் சந்திரசேகரனின் படத்தை வைத்து பிரதேச சபை தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கு மலையக மக்கள் முன்னணிக்கு மாத்திரமே உரிமையுள்ளது.
மலையக மக்கள் முன்னணியிலிருந்து விலக்கப்பட்டவர்களோ அல்லது கட்சிக்கு தொடர்பில்லாதவர்கள் யாரும் பயன்படுத்த முடியாதென மலையக மக்கள் முன்னணி தலைவர் வே.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் உள்ளூராட்சி சபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பல பகுதிகளில் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்
ஆனால் கை சின்னத்தில் போட்டியிடும் நுவரெலியா வேட்பாளர்கள் மற்றும் கார் சின்னத்தில் போட்டியிடுபவர்கள் அமரர் சந்திரசேகரனின் உருவபடத்தை இட்ட பதாதைகளை முகநூலிலும் ஏனைய பொது இடங்களிலும் காட்சிப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அமரர் சந்திரசேகரன் உருவபடத்தை பயன்படுத்தி வாக்கு சேகரிக்க மலையக மக்கள் முன்னணி இணைந்துள்ள தமிழ் முற்போற்கு கூட்டணி வேட்பாளர்களுக்கும் அதேபோல அங்குராங்கெத்த தொகுதியில் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மாத்திரமே உரிமையுண்டு மலையக மக்கள் முன்னணியிலிருந்து விலக்கப்பட்டவர்களுக்கோ விலகியவர்களுக்கோ உரிமை கிடையாது இது தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கும் அறிவித்துள்ளோம்
எனவே இது தொடர்பில் விரைவில் இவ்வாறு பிரச்சாரம் செய்பவர்களுக்கு எதிராக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் என்ற ரீதியில் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படுமென ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.
நீலமேகம் பிரசாந்த்