ஜெர்மனி மக்களுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர். ஜெர்மனியில் பொலிஸாரால் தேடப்படும் கும்பலை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பணம் வழங்கும் இயந்திரம் தகர்க்கப்பட்டு கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ச்சியாக ஜெர்மனியில் இடம்பெற்றுவருகின்றது.

ஜெர்மனியில் அண்மைகாலங்களாக பணம் இயந்திரங்களுக்கு குண்டு வைத்து தளர்த்தி கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

எம் முல்லைம் எனும் பிரசேத்தில் உள்ள கலான் என்று சொல்லப்படுகின்ற அங்காடியில் அமைந்துள்ள பண இயந்திரத்தை கொள்ளையர்கள் கொள்ளையிட்டு பணத்துடன் தப்பி ஓடியதாக தெரிய வந்துள்ளது.

இதனால் இந்த கட்டிடத்திற்கு பல அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் சேதங்கள் விளைந்ததாககவும் தெரிய வந்திருக்கின்றது. இதேவேளையில் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டிருந்தவர்கள் Audi வகை காரில் தப்பி ஓடியதாக தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடி இருப்பதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய, சந்தேக நபர்கள் தொடர்பில் அல்லது சந்தேகத்திற்கிடமான நபர்கள் தொடர்பில் அறிந்தால் தகவல் வழங்குமாறு பொலிஸாரால் டேக்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *