பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் இன்று (20) நள்ளிரவு முதல் ஜனாதிபதிக்கு கிடைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரீஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (20) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஆகவே தனக்குள்ள குறித்த அதிகாரத்தை ஜனாதிபதி பாவிப்பார் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலின் பின்னர் அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுக்கு, அரசியலமைப்பின் 70 1 (அ) உறுப்புரையின் பிரகாரம் நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.