நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய தினங்களில் கனடாவின் தென் ஒன்றாரியோ பகுதியில் பனிப்புயல் வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த முன் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
சில பகுதிகளில் கடும் பனிப்பொழிவினை எதிர்பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்புயல் பனிப்பொழிவு காரணமாக சில பகுதிகளில் மின்சாரம் தடைப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்துக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படக்கூடும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.