நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்தக் கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் W.M.R.விஜேசுந்தர தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மே 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்தலை நடத்த வேண்டும் என்ற ஆணைக்குழுவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என இன்று தேர்தல்கள் ஆணைக்குழ சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார் .
எனினும், வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளில் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் திறைசேரி தேர்தலுக்குத் தேவையான நிதியை வழங்காமை தேர்தலுக்கு இடையூறாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.
இதேவேளை, திறைசேரியின் செயலாளர் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள சத்தியக்கடதாசி ஒன்றை மேற்கோள் காட்டி மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நெரில் புள்ளே நீதிமன்றில் விடயங்களை சமர்ப்பித்தார்.
இதுவரை வழங்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் தௌிவுபடுத்திய அவர் தொடர்ந்தும் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள ஆலோசனை தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார்.