ஈரான் நாட்டில் இராணுவ அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகின் முதல் மிகச் சிறிய வான்-பாதுகாப்பு படகை அந்த நாடு உருவாக்கியுள்ளது.

புரட்சிகர காவலர் கார்ப்ஸ் கடற்படையால் உள்நாட்டு பயன்பாட்டிற்காக ஈரான் தயாரித்த முதல் வகையான கப்பல் இதுவாகும் என கடற்படை ஆய்வாளரும் OSINT நிபுணருமான HI Sutton அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த படகிற்கு ‘சுல்பிகார்-கிளாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் இராணுவத்தில் உள்ள பல உபகரணங்களும் சுல்பிகார்-கிளாஸ் என்ற பெயரில் இருப்பதால் குழப்பதை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இராணுவ படகு தனது செங்குத்து ஏவுகணை அமைப்பில் இருந்து குறைந்த தூர இலக்குகளை அடையும் நவாப் ஏவுகணைகளை வீசும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *