மின்சார சக்தியைக் கொண்டு இயங்கும் சாரதிகளற்ற புதிய ரயில்கள் மணிக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் சாரதிகளற்ற புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சாரதியற்ற ரயில்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பது குறித்து அறிந்து கொள்வதற்கு றொரன்டோ பயணிகளுக்கு ஒர் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
சுரங்கப் பாதை வழியாக இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த ரயில்கள் மணித்தியாலத்திறகு 30000 பயணிகளை போக்குவரத்து செய்யக்கூடிய ஆற்றல் கொண்டவை என தெரிவிக்கப்படுகின்றது.
மெட்ரோலிங்க்ஸ் நிறுவனமும், ஒன்றாரியோ உட்கட்டுமான அமைப்பும் இணைந்து ஹிட்டாச்சி ரயில் நிறுவனத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு 90 செக்கன்களுக்கு ஒரு தடவையும் ரயில்கள் போக்குவரத்தில் ஈடுபடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.