கனடாவும் அமெரிக்காவும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, கனடா அமெரிக்க எல்லையிலுள்ள, புலம்பெயர்வோர் எல்லையைக் கடக்க பயன்படுத்தும் Roxham Road என்னும் பகுதி மூடப்பட்டது.
இது வேறு விதமான அபாயங்களை உருவாக்கும் என அப்போதே புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்புகள் எச்சரித்திருந்தன.
இந்நிலையில், Roxham Road மூடப்பட்டதால், வேறொரு பகுதி வழியாக மக்கள் கனடாவுக்குள் நுழைவது தெரியவந்துள்ளதாக புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்பு ஒன்றைச் சேர்ந்த Franz André என்பவர் தெரிவித்துள்ளார்.
கனடா அமெரிக்க எல்லையின் இரண்டு பக்கங்களிலிருந்தும் தனக்கு தொலைபேசி அழைப்புகள் வருவதாகத் தெரிவித்துள்ள Franz André, சிலர் தன்னிடம் தாங்கள் இப்போது கனடாவுக்குள் இருப்பதாக தெரிவித்ததாக தெரிவிக்கிறார்.
வாட்ஸ் ஆப் வழியாக வேகமாக செய்தி பரவுவதாக தெரிவிக்கும் அவர், தாங்கள் எப்படி கனடாவுக்குள் வனப்பகுதி வழியாக நுழைந்தோம் என அவர்கள் மற்றவர்களுக்குக் கூற, அதைப் பின்பற்றி மற்றவர்கள் அதே வழியாக நுழையக்கூடும் என்கிறார்.