அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூயோர்க் நீதி மன்றம் ஒன்றினால் அவருக்கு எதிராக இந்த குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதன்படி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதி இவர் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
2016 தேர்தலுக்கு முன்னர் தனது தனிப்பட்ட வழக்கறிஞர் மூலம் ஆபாச திரைப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனால் அவர் கைதாகும் சூழல் எழுந்துள்ளது.
இருப்பினும் கைதைத் தவிர்க்க ட்ரம்ப் தாமாகவே சரணடையலாம் என்றும் கூறப்படுகிறது.
அடுத்த வாரம் சரணடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
76 வயதான டொனால்ட் ட்ரம்ப் தன்னுடனான பாலியல் தொடர்பை மறைக்க பான் ஸ்டார் ஸ்டோமி டேனியல்ஸ்க்கு 1,30,000 டாலர் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.