துருக்கியில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது.
அந்நாட்டின் அப்சின் நகரில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் தென்மேற்கே இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானதாக அமெரிக்க புவிவியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
நில நடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி உடனடியாக தகவல் வெளியாக வில்லை.
ஏற்கனவே நில நடுக்கத்தால் பெரும் துயரத்துக்கு உள்ளான மக்களுக்கு மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது பீதியை உண்டாக்கி இருக்கிறது.