ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடைபவணி மற்றும் ஒன்றுகூடல் என்பன கடந்த 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்றது.
அத்துடன், பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியும் பகலிரவு, ஆட்டமாக நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பங்கேற்றார்.
இதன்போது அமைச்சருக்கு, பாடசாலை பழைய மாணவர் சங்கத்தால் நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார்.
2 ஆவது நாள் நிகழ்வில் அதிதியாக கல்லூரியின் பழைய மாணவரும், நீதிபதியுமான ஜெயராமன் ட்ரொஸ்கி பங்கேற்றார். அத்தோடு, அட்டன் கல்வி வலய பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் உட்பட பலர் இதன்போது கலந்துக் கொண்டிருந்தனர்.
இருநாட்கள் நடைபெற்ற மேற்படி நிகழ்வுகளில் சுமார் 3000 பேர்வரை பங்கேற்றிருந்தமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்)