சூடானில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பும் 72 மணி நேரம் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்.
மக்கள் ரமழான் பண்டிகையைக் கொண்டாட ஏதுவாக 72 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது.
இதனை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சூடான் ராணுவமும், துணை ராணுவப்படையும் ஏற்றுக் கொண்டுள்ளன.
இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் செய்தியாளர்களிடன் கூறுகையில், “சூடான் கலவரம் தொடர்பாக ஆப்பிரிக்க யூனியன், அரபு லீக் மற்றும் பிற அமைப்புகளுடன் ஆலோசித்துள்ளேன்.
அனைவருமே சூடான் உள்நாட்டுப் போரை வன்மையாகக் கண்டித்தனர்.
இந்த மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அனைவருமே வலியுறுத்தினர்.
உடனடி நடவடிக்கையாக, சூடானில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பும் 72 மணி நேரம் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்.
மக்கள் ரமழான் பண்டிகையைக் கொண்டாட ஏதுவாக 72 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்” என்றார்.
இந்நிலையில் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு புர்ஹான் அளித்தப் பேட்டியில், “நாங்கள் போர் நிறுத்தத்திற்கு தயாராக இருக்கிறோம். ஆனால் எங்களை எதிர்த்துக் களத்தில் உள்ள ஆர்எஸ்எஃப் படையினர் மக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்ய மறுக்கின்றனர்.
மேலும், இந்த சர்ச்சை தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க யாரும் ஆதரவளிக்கவில்லை. அதனாலேயே வேறு வழியின்றி ராணுவத்தைப் பயன்படுத்துகிறோம்” என்றார்.