ஆசியாவிலேயே அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அதன்படி, இலங்கையில் வயது வந்த ஒவ்வொரு நால்வரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது, இது 23% வீதமாகும்.

கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், சுகாதாரக் கொள்கை நிறுவனம் மற்றும் கொழும்பு, ருகுணு மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகங்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் உள்ள முதியவர்களில் மூவரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும், இது 31% வீதமாக உள்ளதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *