நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் புனித நீர் தடாக திறப்பும், தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டலும், முத்திரை வெளியீடும் நிகழ்வும் நேற்று 23.04.2023 நடைபெற்றது.
இந் நிகழ்வானது ஆலய அறங்காவலர் சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றதுடன் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் தினேஸ் குணவர்தனவும், சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.பி.ரட்ணாயக்க, யதாமினி குணவர்தன, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, உதவி தூதுவர் டாக்டர் திருமதி எஸ்.அதிரா ஆகியோரும் மற்றும் நுவரெலியா டெல்லி ரோட்டறி கழக உறுப்பினர்களும் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்களும் பக்த அடியார்களும் கலந்து கொண்டனர்.
தியான மண்டபத்திற்கான அனுசரனையை டெல்லியை சேர்ந்த பிரதீப் ஜெய்ன் குடும்பத்தினர் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
(க.கிஷாந்தன்)