ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் வலசை பஸ் நிலையம் முன்பு மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்க செயலாளர் ஜேசு ராஜா, மீனவர் சங்கத் தலைவர்கள் தேவதாஸ், எமரிட், சகாயராஜ் ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை உடனே விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கச்சத்தீவு அருகே அச்சமின்றி மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீன்பிடி தடைக்கால நிவாரண உதவித் தொகையை அரசு உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களும் கலந்து கொண்டனர்.