லிட்ரோ கேஸ் நிறுவனம் இன்று (03) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி 12.5 கிலோ கிராம் கொண்ட வீட்டு சமையல் எரிவாயு ஒன்றின் விலையை 100 ரூபாவால் குறைக்க லிட்ரோ கேஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய 12.5 கிலோ கிராம் கொண்ட வீட்டு சமையல் எரிவாயு ஒன்றின் புதிய விலை 3,638 ரூபாவாகும்.
இதேவேளை, 5 கிலோ கிராம் கொண்ட வீட்டு சமையல் எரிவாயு ஒன்றின் விலையை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,462 ரூபாவாகும்.
2.3 கிலோ கிராம் கொண்ட வீட்டு சமையல் எரிவாயு 19 ரூபாவால் குறைக்கப்பட்ட நிலையில் அதன் புதிய விலை 681 ரூபாவாகும்.