சுமார் மூவாயிரம் பாடசாலை மாணவர்களை சில் அனுஷ்டானத்தில் ஈடுபடுத்தும் நிகழ்வு இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக உள்ள ஷங்ரிலா பசுமை மைதானத்தில் இடம்பெற்றது.

அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தினால் இந்த “பௌத்தலோக மத அனுஷ்டான நிகழ்ச்சியை” ஏற்பாடு செய்திருந்தது.கொழும்பு வலயத்தில் உள்ள பல பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதுடன்,பிரதான பௌத்த பிரசங்கத்தை ஒலபொடுவ ரஜமஹா விகாரையின் தேரர் இத்தாலி மிலானோ லங்காராம விகாராதிபதி மேல்மாகாண கொழும்பு களுத்துறைப் பிரிவின் பிரதம நீதிமன்ற சங்கநாயக்கருமான, வண. ஒலபொடுவ தம்மிக தேரர் நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தர்ம கலந்துரையாடலுக்கு, இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர், தென்னிலங்கையின் உப பிரதம சங்கநாயக, கோட்டை சம்புத்தாலோக விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் வண, இத்ததெமலியே நாயக்க தேரர், வித்யாஜோதி விருது பெற்ற பேராசிரியர் நிமல் டி சில்வா, மனிதவளம் மற்றும் தொழில் துறை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை “புத்த ரஷ்மி” தேசிய வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, காலி முகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானம் மற்றும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் வெசாக் தோரணங்கள், வெசாக் கூடுகள், பக்திப் பாடல்கள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சிங்கப்பூரின் மகா கருணா பௌத்த சங்கமும் சிங்கப்பூரின் விலிங் ஹார்ட்ஸ் (Wiling Hearts) அறக்கட்டளையும் இணைந்து ஏற்பாடு செய்த நாற்பது பிக்கு மாணவர்கள் மற்றும் 1200 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு, ஷங்ரிலா பசுமை மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேடையில் இன்று ( 05) முற்பகல் இடம்பெற்றது.

வெசாக் அன்னதான நிகழ்வு, அன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு ஷங்கிரிலா பசுமை மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அது மே 05 மற்றும் 06 ஆம் திகதிகளிலும் தொடர்ந்து நடைபெறும்.

சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கத்தின் தலைவர் கலாநிதி வண, கரதெடியன குணரதன தேரர், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் இணைந்து மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கிவைத்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தின் தலைவர் சந்திர நிமல் வாகிஷ்ட ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

குருநாகல், கேகாலை, கம்பஹா, கொழும்பு, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாடசாலை மாணவர்களுக்கு இந்தப் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், அதன் பின்னர் அவர்கள் கோட்டை ஜனாதிபதி மாளிகையை பார்வையிடும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

இதேவேளை, சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கமும் சிங்கப்பூரின் வில்லிங் ஹார்ட்ஸ் (Wiling Hearts) அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் அன்னதான நிகழ்வு இன்று (05) மாலை 6.30 மணிக்கு ஷங்ரிலா பசுமை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இந்நிகழ்வு நாளையும் (06) நடைபெறவுள்ளது.

இதற்கு இணையாக ஷங்ரிலா பசுமை மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேடையில், இலங்கை கடற்படை, சிவில் பாதுகாப்பு படை, இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இராணுவ பக்தி பாடல் குழுக்களின் பக்தி பாடல்கள் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *