இலங்கை மெய்வல்லுநரான அருன தர்ஷன 400 மீற்றர் ஓட்டத்தில் தனது சிறந்த காலப்பெறுதியை பதிவுசெய்துள்ளார்.
ஜப்பானில் நடைபெறும் மிச்சிதாகா ஞாபகார்த்த சர்வதேச மெய்வல்லுநர் போட்டிகளில் அவர் இந்த ஆற்றலை வௌிப்படுத்தியுள்ளார்.
ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை அருன தர்ஷன 45 : 49 செக்கன்களில் பூர்த்திசெய்தார்.
இது இந்தப் போட்டிப் பிரிவில் அவரது சிறந்த காலப்பெறுதியாகும்.
சுகத் திலகரத்ன, ரொஹான் பிரதீப் குமார, பிரசன்ன அமரசேகர ஆகியோருக்கு பின்னர் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் இலங்கை வீரர் ஒருவர் வௌிப்படுத்திய அதிசிறந்த ஆற்றல் இதுவாகும்.
இதேவேளை, மகளிருக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்தில் இலங்கையின் நிலானி ரத்நாயக்க நான்காமிடத்தை அடைந்தார்.
போட்டியை அவர் 10 நிமிடங்கள் 2 : 09 செக்கன்களில் பூர்த்திசெய்தார்