இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பத்திரன டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டிய வீரர் அல்ல என சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி, “நான் தனிப்பட்ட முறையில் அவர் சிவப்பு-பந்து போட்டிகளில் விளையாடக்கூடாது என்று நினைக்கிறேன்.
அவர் மிகவும் வித்தியாசமான நபர். முக்கியமான தருணங்களில் அவரை எப்போதும் பயன்படுத்த முடியும். ஆனால் அவர் அனைத்து ஐசிசி போட்டிகளுக்கும் தகுதியானவர் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அவர் இலங்கைக்கு பெரும் சொத்தாக இருப்பார்.” என தோனி தெரிவித்துள்ளார்.