வடக்கு – கிழக்கு நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றிற்காக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அழைப்பின் பிரகாரம் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
அதற்கான அழைப்பிதழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.