IPL வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை RR அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றார்.
13 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த அவர், 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் எடுத்தார்.
யஷஸ்வியின் சிறப்பான இன்னிங்ஸில் 5 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் அடங்கும்.
முன்னதாக, கே.எல்.ராகுல் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் 14 பந்துகளில் 50 ரன்கள் குவித்து அதிவேக அரை சதம் என்ற கூட்டு சாதனையை படைத்தனர்.
நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 08 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.
ராஜஸ்தான் அணி 13 ஓவர்கள் ஒரு பந்தில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 13 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 98 ரன்களும், சஞ்சு சாம்சன் 29 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 48 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.