பதுளை, ஹாலி – எல பகுதியில் நடனக் குழுவை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வேனை நடனக் குழுவின் உரிமையாளரே ஓட்டிச் சென்றதாகவும், அவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வேன் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களில் 18 முதல் 20 வயதுக்குட்பட்ட எட்டு சிறுமிகள் மற்றும் இரண்டு சிறுவர்கள் மற்றும் வேனின் சாரதியும் அடங்குகின்றனர்.
காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது நிலைமை மோசமாக இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.