IPL: மொத்தம் உள்ள 70 லீக் ஆட்டங்களில் நேற்றுடன் 62 போட்டிகள் முடிந்து விட்டன.
இன்னும் 8 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் 18 புள்ளிகள் பெற்று முதல் அணியாக நேற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
அந்த அணி முதல் 2 இடங்களை பிடிப்பது உறுதி செய்யப்பட்டது. சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 2 அணிகளும் வாய்ப்பை இழந்து வெளியேறின.
பிளே ஆப் சுற்றின் 3 இடத்துக்கு 7 அணிகள் போட்டியில் உள்ளன. அதன் விபரம் வருமாறு:-
சென்னை சூப்பர் கிங்ஸ் டோனி தலைமையிலான சி.எஸ்.கே. அணி 15 புள்ளியுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.
அந்த அணி கடைசி ஆட்டத்தில் டெல்லியை சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்றால் சென்னை 17 புள்ளியுடன் தகுதி பெறும்.
CSK தோற்றால் மற்ற அணிகளின் ஆட்டத்தின் முடிவை பொறுத்தே பிளே ஆப் சுற்று வாய்ப்பு தெரியவரும். ஆனாலும் முதல் 4 இடங்களுக்குள் வருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
டெல்லியை வீழ்த்தி “குவாலிபயர் 1” போட்டியில் ஆடுவதை சி.எஸ்.கே. இலக்காக கொண்டுள்ளது. 14 புள்ளிகளுடன் தற்போது 3வது இடத்தில் உள்ளது.