இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரைபாகினா சாம்பியன் பட்டம் வென்றார்.
இத்தாலியின் ரோம் நகரில் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் போட்டியின் இறுதிச் சுற்றில் ரைபாகினாவும், உக்ரைன் வீராங்கனை அன்ஹெலினா கலினினாவும் மோதினர்.
இதில் ரைபாகினா 6-4, 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது காயம் காரணமாக அன்ஹெலினா போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து ரைபாகினா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சாம்பியன் பட்டம் வென்ற ரைபாகினா, இந்த சீசனில் 1,000 டபிள்யூடிஏ புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு அவர் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியிலும் பட்டம் வென்றிருந்தார்.
இவர் 2022-ம் ஆண்டில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.