பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமை இலங்கை மக்களுக்குக் கிடைத்த தோல்வி என ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த தோல்வி என்னுடையது அல்ல. இது ஒட்டுமொத்த மக்களுக்கும் ஏற்பட்ட தோல்வி” என தெரிவித்தார்.