IPL கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் MI அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி அபாரமாக வெற்றிப்பெற்றது.
இதில், மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மேத்வால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால், அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இதுகுறித்து ஆகாஷ் மத்வால் கூறியதாவது:- இந்த வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தேன். நான் இன்ஜினியரிங் படித்துள்ளேன்.
ஆனால் என்னுடைய விருப்பம் கிரிக்கெட்டாக இருந்தது. 2018ல் இருந்து என்னுடைய வாய்ப்பிற்காகக் கடுமையாக உழைத்து வருகிறேன்.
இன்ஜினியர்கள் விரைவாக கற்றுக்கொள்பவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.