CSK அணி 5 ஆவது முறையாகவும் IPL சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
அகதபாத் மைதானத்தில் நேற்றிரவு நடைப்பெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் டைடன்ஸ் (GT) அணியை டக்வர்த் லூயிஸ் முறைப்படி 5 விக்கெட்டுகளால் CSK வென்றது.
இதன்மூலம் IPL 2023 தொடரில் 5வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது.
215 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே துரத்திய நிலையில் ஷமி வீசிய முதல் ஓவரில் 3 பந்துகளை ருதுராஜ் கெய்க்வாட் சந்தித்து ஒரு பவுண்டரி விளாசினார்.
அப்போது மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது. நீண்ட நேரம் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இதனால் ஓவர்கள் குறைக்கப்பட்டன. 15 ஓவர்களில் சென்னை அணி வெற்றிபெற 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டன.
அதன்படி, கெய்க்வாட் நிதானம் காண்பிக்க, கான்வே வாணவேடிக்கை நிகழ்த்தினார். இருவரும் தனிப்பட்ட முறையில் பெரிய ஸ்கோர் எடுக்கவில்லை என்றாலும் நல்ல பாட்னர்ஷிப் அமைத்தனர்.
6.3வது ஓவரில் அணியின் ஸ்கோர் 74 ரன்களாக இருந்தபோது ருதுராஜ் கெய்க்வாட் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரையும் மோஹித் சர்மாவே வீசினார். வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பபட்டது.
கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை வர ஐந்தாவது பந்தில் சிக்ஸ் அடித்தார் ஜடேஜா. கடைசி பந்தை பவுண்டரி அடிக்க சென்னை அணி ஐந்தாம் முறையாக கோப்பை வென்றது.
15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து சென்னை அணி 171 ரன்கள் இலக்கை தொட்டது.
ஜடேஜா 15 ரன்களும், ஷிவம் தூபே 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.