10வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி 5வது முறையாக IPL சாம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது.
இதற்கு முன்பு 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.
2 ஆண்டு தடை காரணமாக இதுவரை 14 சீசனில் மட்டுமே பங்கேற்று இருந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 5 முறை ஐ.பி.எல்.சாம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது.
அந்த சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் சமன் செய்து, கிண்ணத்தை வென்றுள்ளது.
கிண்ணத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.
2வது இடத்தை பிடித்த குஜராத் அணிக்கு ரூ.13 கோடி கிடைத்தது.
3வது இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ், 4வது இடத்தை பிடித்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு முறையாக ரூ.7 கோடி, ரூ.6.5 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.