தேர்தலில் தமக்கு ஆதரவாக வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் ஒரேவிதமாக சேவையாற்ற உள்ளதாக அல்பர்ட்டா மாகாண முதல்வர் டெனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
அனைத்து அல்பர்ட்டா மக்களின் நம்பிக்கையையும் வென்றெடுக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மக்களின் பாதுகாப்பு, பொருளாதாரத்தை மேம்படுத்தல் போன்ற விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் மற்றும் சக்தி வள கொள்கைகள் தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து கொண்டு மாகாணத்தை வழிநடத்த உத்தேசித்துள்ளதாக டெனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார்.