இந்தியாவின் லக்னோவில் உள்ள நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
பாதாள உலக உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் சஞ்சீவ் ஜீவா அங்கு உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் சிறு குழந்தை மற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வழக்கறிஞராக நீதிமன்றத்தில் நுழைந்துள்ளார்