குரங்கு அம்மை நோய் தொடர்பில் சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என பதில் தலைமை தொற்றுநோய் நிபுணர் டொக்டர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இனங்காணப்பட்ட குரங்கு அம்மை நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது நான்காக அதிகரித்துள்ளது.
ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு குரங்கு அம்மை பரவுவது மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும், எனவே இது தொடர்பில் தேவையற்ற அச்சம் தேவையில்லை எனவும் வைத்தியர் சமித்த கினிகே மேலும் தெரிவித்தார்.