பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவர் பிரதமராக கடமையாற்றிய போது கொவிட் பரவிய காலப்பகுதியில் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டே இதற்கு காரணம் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த குற்றச்சாட்டால் போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியையும் இழந்தார்.
சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இடைநிறுத்துவது குறித்து போரிஸ் ஜோன்சனுக்கு எச்சரிக்கை விடுத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் முன்னர் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.