உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) மகுடத்தை அவுஸ்திரேலிய அணி இந்திய அணியை தோற்கடித்து வென்றுள்ளது.

இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்தது.

அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சுக்கு 469 ரன்கள் எடுத்தது.

பதிலுக்கு இந்திய அணியால் 296 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸிற்காக அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பளித்தது.

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியால் 234 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதன்படி, 2023 உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *