2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை ஏற்று நடத்தும் நாடு தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.
அண்மையில் பகரினில் இடம்பெற்ற ஆசிய கிரிக்கெட் பேரவை கூட்டத்தில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக இந்த முறை ஆசிய கிண்ண போட்டிகளை ஏற்று நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்த இந்திய கிரிக்கெட் சபை போட்டிகளை வேறு நாட்டுக்கு மாற்றுமாறு கோரியதை அடுத்து சர்ச்சை வெடித்தது.
நீண்ட காலமாக நிலவும் இந்து – பாகிஸ்தான் நாடுகளுகளுக்கு இடையிலான அரசியல் பிரச்சினை மேற்படி சர்சைக்கு காரணமாகும்.
இதன் காரணமாக 2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் பாகிஸ்தானில் சென்று விளையாடுவதை இந்தியா அணி தவிர்த்து வருகின்றது.
இவ்வாறான சூழலில் இந்திய அணி பங்கேற்கும் வகையில் பாகிஸ்தான் அல்லாத வேறு நாட்டை தெரிவு செய்வது நல்லது என இந்திய கிரிக்கெட் சபை கேட்டுள்ளது.
சிலவேளை ஆசிய கிண்ண போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த முடியாது போனால் மாற்றிடாக இலங்கை, ஐக்கிய அரபு இராஜியம், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பாகிஸ்தானின் ஏற்று நடத்தும் உரிமையோடு போட்டிகள் நடைபெறும்.