ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம் தொடர்பாக – ஜஸ்டின் ட்ரூடோ

பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம் தொடர்பாக கனடாவின் குற்றச்சாட்டை, இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம் தொடர்பாக கனடா பிரதமர் இந்தியா மீது குற்றம்சாட்டினார். இதனையடுத்து இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இச்சூழ்நிலையில், அமெரிக்காவில் வாழும் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவரை கொலை செய்ய நடந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த சதியில் […]

கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்

கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கியூபெக்கில், ஏற்கனவே 26000 நாணயக் குற்றிகள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் போலி நாணயக்குற்றிகள் ஒன்றாரியோவில் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு கனடாவில் இந்த நாணயக் குற்றிகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு டொலர் பெறுமதியான நாணயக் குற்றிகளே இவ்வாறு போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்

பெரும்பான்மையான கனடியர்கள் வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டுக்குள் வருவதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக கருத்து வெளியிட்டுள்ளனர். குடியேறிகளின் எண்ணிக்கை உயர்வானது, வீட்டுப் பிரச்சினை உக்கிரமடையச் செய்துள்ளது என கனடியர்கள் தெரிவித்துள்ளனர். முன்னணி நிறுவனமொன்று மேற்கொண்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. நாட்டுக்குள்; கூடுதலாக குடியேறிகள் வருவதனால் வீடுகள் மற்றும் சுகாதார நலன்கள் என்பன தொடர்பில் பிரச்சினை ஏற்படுவதாகத் கருத்து வெளியிட்டுள்ளனர். குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு நாட்டின் கல்வித்துறையிலும் பாதக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், குடியேறிகளின் […]

டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்

டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர் பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இன்றைய தினம் வெப்பநிலை கடுங்குளிரை உணரச் செய்யும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை வெப்பநிலை மறை 5.6 செல்சியஸ் பாகையாக காணப்பட்டது. கடந்த 20 ஆம் திகதியும் இதே விதமாக மறை 5.6 செல்சியஸ் பாகை அளவில் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இந்தக் காலப்பகுதியில் அதிக கூடிய வெப்பநிலையாக 4.3 பாகை செல்சியஸாக அமையும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலநிலை தொடர்பான குறிகாட்டிகளில் […]

ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்

ரொறன்ரோவில் இயங்கி வந்த தடுப்பூசி நிலையங்கள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவின் நான்கு இடங்களில் இவ்வாறு கோவிட்19 தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மாகாண அரசாங்கம் வழங்கி வந்த நிதியுதவிகள் நிறைவு பெறுவதாகவும் இதனால் குறித்த தடுப்பூசி நிலையங்கள் மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நோர்த் யோர்க் சிவிக் சென்டர், கொல்வர்டேல் மோல், மெற்றோ ஹால் மற்றும் ஸ்காப்றோ தடுப்பூ நிலையம் என்பன நிரந்தரமாக மூடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோ பொதுச் சுகாதார நிறுவனம் பெரும் எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை […]

ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்

ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்19 தொற்று தலைதூக்கத் தொடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒன்றாரியோவின் கழிவு நீரை ஆய்வுக்கு உட்படுத்தியதன் மூலம் கோவிட் பரவுதல் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் ஒரு ஆண்டு காலமாக மாகாணத்தில் இல்லாத அளவிற்கு தற்பொழுது கோவிட் பரவுகை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாத கால இடைவெளியில் கழிவு நீரில் கோவிட் தொற்று குறித்த குறிகாட்டிகள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன.

கனடாவில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை நகைகள்

கனடாவில் பெருந்தொகை நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் ரெக்ஸ்டேல் பகுதியில் அண்மையில் இவ்வாறு நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் இருந்து இந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. சுமார் மூன்று லட்சம் டாலர்கள் பெறுமதியான ஆபரணங்கள் இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அல்பியோன் மற்றும் 27ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகாமையில் இந்த திருட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.

கனடியர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் கனடியர்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக கடும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பானது கனடிய மக்களின் உளச் சுகாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பண வீக்கமானது பொருளாதார ரீதியில் மட்டுமின்றி மக்களின் உளவியல் ரீதியாகவும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எம்என்பி என்ற நிறுவனத்தினால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன. பண வீக்கம் காரணமாக அதிக எண்ணிக்கையிலானவர்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வெளியே […]

இருதய நோய் போன்ற காரணிகளால் அதிகளவான கனடியர்கள் உயிரிழப்பு

கனடாவில் மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக கனடிய மக்களின் ஆயுட்காலம் குறைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் கனடியர் ஒருவரின் ஆயுட்காலம் 82.3 வருடங்கள் எனவும், தற்பொழுது 2022 ஆம் ஆண்டில் இந்த ஆயுட்காலம் ஆனது 81.3 வயதாக குறைவடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதிகளவு ஆயுட்காலம் குறைவடைந்த பகுதியாக சஸ்கட்ச்வான் பதிவாகியுள்ளது. புற்றுநோய் இருதய நோய் போன்ற காரணிகளால் அதிகளவான கனடியர்கள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  

ரொறன்ரோ பகுதியில் கோர விபத்து ஐந்து பேர் பலி

ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து சம்பவம் ஒன்றில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். நான்கு பதின்ம வயது உடையவர்களும் ஒரு பெண்ணும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இரண்டு வாகனங்கள் மோதி கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹிடன்வெளி பகுதியின் 60-ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 15 முதல் 17 வயது மதிக்கத்தக்க இளைஞர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.