இந்தியவில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில் BCCI 10 ஐபிஎல் அணிகள், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியவில் 5,335 பேர் நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியவில்  25,587 பேர் தொற்று பாதிப்புடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் டெல்லி, மராட்டியம், இமாச்சலப் பிரதேசம், அரியானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *