ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு

கனடாவின் ரொறன்றோ நகரில் வீட்டு விற்பனை குறைவைடைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது ஆறு வீத வீழ்ச்சி பதிவாகியுள்ளது. ரொறன்றோ பிராந்திய வீடு விற்பனை முகவர்கள் சபை தெரிவித்துள்ளது. விற்பனைக்காக பட்டியிலிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 16.5 வீதம் அதிகமாக பதிவாகியது. எனினும், விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது. விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் சராசரி விலை 1,082,179 டொலர் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த […]

விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை குறைக்க தீர்மானம்

இந்த விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் குறைந்தளவில் செலவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மக்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் குறைந்தளவில் செலவுகளை செய்வதற்கு ஒன்றாரியோ மக்கள் திட்டமிட்டுள்ளனர் என கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. பணவீக்க நிலைமைகள் விடுமுறை கால கொள்வனவில் தாக்கம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அல்பேர்ட்டாவில் அவசர கால நிலை அறிவிப்பு

வடக்கு அல்பேர்ட்டா நகராட்சி மாவட்டத்தில் அவசர கால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கடுமையான குற்றச்செயல்கள் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பகுதியில் மிக மோசமான குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வீடுகளை உடைத்து கொள்ளை, வாகனங்கள் களவாடப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குற்ற செயல்களின் அதிகரிப்பு காரணமாக குறித்த பகுதியில் அவசர கால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே குற்றச்செயல்கள் இடம்பெற்ற போதிலும் […]

கல்கரியில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களின் ஒன்றுக்கூடல்!

கனடா ஆல்பர்ட்டா மாகணத்தின் பிரதான நகரங்களில் ஒன்றான கல்கரியின்  தேசிய மக்கள் சக்தியின்  ஆதரவாளர்கள் நலன்விரும்பிகளின் ஒன்ற கூடல் இன்று இடம்பெற்றது. கல்கரி கிளன்மோர் பார்க்கில் இன்று நடைப்பெற்ற கூட்டத்திற்கு ரத்னபால தலைமை வகித்தார். இந்த  ஒன்று கூடலில் விசேட அம்சமாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான டாக்டார் நாலிந்த ஜெயதிஸ்ஸ  இணையம் ஊடக ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.   அதில் குறிப்பாக தேசிய மக்கள் சக்தியின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து விரிவாக விளக்கினார். […]